அன்னிக்கு காலையில 8 மணி இருக்கும். கடைசி பரீட்சைக்கு கிளம்பிக்கிட்ருந்தான். வழக்கத்தை விட குதூகலமாவும் எதையோ எதிர்பார்த்துட்டும் இருந்தான். முழு பரீட்சை முடியற நாள் வந்தாலே அதுக்கப்புறம் வரப்போற சம்மர் லீவு தானே ஞாபகம் வரும். அந்த கனவு கோட்டைல பரீட்சையை கோட்ட விட்டுடாதனு அம்மா சொன்ன வார்த்தையோடு சைக்கிள்ல ஏறி பள்ளிக்கூடத்துக்கு போனான். வழியெல்லாம் அதே நினைவு.
நாலாம் கிளாஸ் படிக்கிறப்போ, கூட படிக்கற பசங்க ஒரு சனிக்கிழமை லீவு விட்டாச்சுனு வீட்டுக்கு வந்து விளையாட கூப்பிட்டாங்க. அப்போ தான் மொத தடவ அவன் கிரவுண்டுக்கு விளையாட போனான். ஜே ஜே னு ஒரே கூட்டம். எங்க பாத்தாலும் பசங்க, ஒருத்தன் பந்த தொறத்தி ஓடுறான், இன்னொருத்தன் அவனுக்கு குறுக்க புகுந்து ஓடிப்போய் பந்து வீசுறான். நாலா பக்கமும் பந்து பறக்குது. எது யார் பந்துன்னே தெரியாம இவன் பாக்க, நடுவுல ஒரு பிட்சுல இவன் பிரண்ட்ஸ் எல்லாம் கூடி பேசிக்கிட்ருந்தாங்க. இவன் பக்கத்துல ஒருத்தன் வந்து, "டாஸ் தோத்துட்டோம், நம்ம செகண்ட் பேட்டிங்"னு சொல்லிட்டு "நேரா போய் பவுண்டரி"ல நில்லுன்னான். யார் எந்த டீம்ன்னே தெரியாம சரி போவோம்னு போய் நின்னான். அந்த தூரத்துலேர்ந்து அவன் நண்பர்கள் எல்லாரும் எங்க எங்க நிக்குறாங்கனு தெரியறதுக்குள்ள 2 ஓவர் முடிஞ்சு போச்சு. ஒரு வழியா எல்லாம் புரிஞ்சு, அவன் கிட்ட வந்த பந்த பிடிக்க முன்னாடி போனவன் மேல, நேரா இன்னொருத்தன் வந்து முட்டி ரெண்டு பேரும் கீழ விழ, பந்து ரெண்டும் மெதுவா உருண்டு பவுண்டருக்கு போய்டுச்சு. இப்போ எது யார் பந்துன்னு தெரியாம, ஆளுக்கு கெடச்ச பந்த எடுத்துக்கிட்டு சாரி சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. அதுக்கப்பறம் கொஞ்ச நேரத்துக்கு பந்து எதுவும் வரல. பொழுது போகட்டும்னு மத்த டீம் ஆடுறத பாத்துட்ருந்தான். "பாரேன், அந்த அண்ணா அடிச்ச அடியில பந்து தொலஞ்சே போச்சு. பந்த தேட போய்ட்ருக்காங்க." அப்படினு அவனுக்குள்ளயே சொல்லிக்கிட்டப்போ, தூரத்துல இன்னொருத்தன் இவன பாத்து, "டேய் தம்பி, பக்கத்துல இருக்கிற அந்த பந்த தூக்கி போடுடா"ன்னு கேட்டதும் உருண்டு வந்த பந்த எடுத்து மொத்த தெம்பையும் கொண்டு, கேட்டவன் பக்கம் எறிஞ்சான். அது மெதுவா உருண்டு ஒரு வழியா போய் சேர்ந்தது.
அடுத்த கொஞ்ச நேரம் ஹெவி டியூட்டி. 10 ஓவர் மேட்சுல கடைசி ரெண்டு மூணு ஓவர் எப்பவுமே அப்படி தான். பந்த தடுக்கிறானோ இல்லையோ, அது பவுண்டரிக்கு போனதும் பொறுக்கி போடறதுல ஒரு திருப்தி. அடிக்கடி செவுத்த தாண்டி பந்து வெளிய போறப்போ, சாமர்த்தியமா அது எங்க போயிருக்கும்னு கண்டு புடிச்சு கொண்டு வர்றதே ஒரு தனி பெரும தான். சில சமயம் பந்து கையில சிக்கும், பல சமயம் நழுவிடும். ஆனா ஏதோ எல்லாத்தையும் பிடிக்க போற மாதிரி ஓடறதுக்கும் தாவறதுக்கும் கொறச்சல் இல்ல. பத்து ஓவர் முடிஞ்சு எல்லாம் பெவிலியன், அதான், சைக்கிள் ஸ்டாண்ட்க்கு திரும்பினாங்க. அதுக்குள்ள ஒருத்தன் போய் எல்லாருக்கும் வாட்டர் பாக்கெட் வாங்கிட்டு வந்தான். அந்த மனசு தான் சார் கடவுள்.
அடுத்து பேட்டிங். ஓப்பனிங் இறங்கி, அடிக்க வேண்டிய 53 ரன்னையும் தனி ஆளா 4,6 ன்னு அடிச்சு அஞ்சே ஓவர்ல மேட்ச்ச முடிக்கணும்னு எப்போவும் போல கனவு கோட்டை தான் கட்டினான். பேட்டிங் ஆடப் போற எல்லாரும் ஒண்ணு அடிக்கணும் இல்ல அவுட் ஆகணும். அப்போ தான் அடுத்து இன்னொருத்தன் போய் ஆட முடியும். இது தான் சட்டம். சட்டத்தை மீறினா தண்டனை சுலபம். அடுத்து ஆட வேண்டியவன் தான் அம்பயரா இருப்பான். அவுட்டுன்னுடுவான். ஓரளவுக்கு ஆட தெரிஞ்சவன், இல்லேன்னா பேட்டுக்கு சொந்தக்காரன் மொதல்ல ஆடுவான். அப்புறம் சுமாரா ஆடுற கொஞ்சம் பேர் ஒவ்வொருத்தரா நீ நான்னு அடிச்சுகிட்டு, "நீ பவுலிங் போட்ட, நான் போடல"னு பஞ்சாயத்து பேசி ஒரு முடிவுக்கு வரதுக்குள்ள இருட்ட ஆரம்பிக்கும்.
கடைசியா 2 ஓவர் ல 15 ரன் வேணும்ங்கிற நிலைமையில எல்லாரும் அவுட் ஆகவே இவன ஆட சொல்லுவாங்க. "நீ தொட்டு மட்டும் விடு, பை ரன்னர் வெச்சுக்கலாம், அவன் ஓடிடுவான்"னு ஒருத்தன் மாஸ்டர்ப்லான் சொல்லுவான். இதை கேட்டு நம்பி போய் விளையாடினா கண்ணுல ஒண்ணுமே தெரியாது. ஒருத்தன் ஓடி வருவான் கைய சுத்துவான் அடுத்த நிமிஷம் பின்னாடி விக்கெட் கீப்பர் "பவுலிங்! பவுலிங்! கமான்"னு கத்தினப்புறம் தான் பந்து போனதே புரியும். இந்த இருட்டுல பந்த எங்க தொட்டு, எப்படி ஓடி, என்னத்த ரன் எடுக்கிறதுனு யோசிக்கிறப்போ, தெய்வாதீனமா எதிர் டீம்ல ஒருத்தன் சண்டை போட்டு "நான் ஓவர் போடுறேன், ஜெயிக்க தான் போறோமே"னு வந்து நோபால் ஒயிட் எல்லாம் போட்டு 2 பால்ல நாலு ரன்னுங்கிற நிலைமைக்கு கொண்டு வந்துடுவான். அடுத்த பந்துல ஒரு ரன். கடைசி பந்து, மூணு ரன் அடிச்சா ஜெயிப்பாங்க. அப்போ தான் பின்னாடில இருந்து ஒருத்தன் "அடி டா போர்"ம்பான். பை ரன்னர் "எப்படியாவது தொட்டுடுடா, நான் ஓடிக்கிறேன்"ன்னுவான். தொட்டு விட்டா மூணு எல்லாம் ஓட முடியாது, அடிச்சா பந்து மொதல்ல பேட்ல படணுமே, பாக்கிறதே குத்துமதிப்பா தான். ஏதோ சமாளிச்சு தடவி விட்டா அப்போனு பாத்து சரியா பந்த புடிச்சுடுவாங்க. முடிஞ்சு போச்சுன்னு நெனைக்கிறப்போ தூக்கி போட்டு ஓவெர்த்ரோ. ஒரு வழியா ஜெயிச்சாச்சு. அன்னிக்கு நடந்ததுல யார் யார் என்னென்ன சொதப்பினாங்கனு மாத்தி மாத்தி கிண்டல் பண்ணிகிட்டே வீடு திரும்ப வேண்டியது தான்.
இதெல்லாம் பரீட்சை ஹால்ல இவனுக்கு வர்ற நெனப்பு. ஒரு வழியா எப்படியோ படிச்சது படிக்காதது எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து எழுதி முடிச்சா போதும், விடுதலை. பேப்பர மடிச்சு குடுத்துட்டு கனவு கண்டுக்கிட்டே வீட்டுக்கு அவசரமா வரப்போ திடீர்னு எங்கேயிருந்து வந்ததோ தெரியல, கருமேகம். ஆனா அதெல்லாம் இவன் கண்ணுல படல. வீட்டுக்கு போய் பைய வெச்சுட்டு துணிய மாத்திக்கிட்டு கெளம்பணும். அம்மா அவன்கிட்ட "எப்படி எழுதின"னு கேட்டதுக்கு "முடிஞ்சுடுச்சுல, விடேன்"னு சலிச்சுக்கிட்டு குடுத்த பாலை குடிச்சுட்டு வெளிய போனா ஜோ னு கொட்டுது மழை. பொதுவா மழைன்னா அவனுக்கு பிரியம். ஜன்னல் பக்கத்துல வந்து தூறல்ல நனையறது தனி சுகம்னு நெனைக்கிறவன். அடுத்த நாள் வெந்நீரும் அம்ருதாஞ்சனும் அம்மா பொறுப்பு. ஆனா இன்னிக்கு என்னவோ அந்த மழை மேல எரிஞ்சு விழ ஆரம்பிச்சான், "இன்னிக்கு தான் வரணுமா? நானே இவ்வளோ நாளுக்கப்புறம் இன்னிக்கு தான் விளையாட போறேன். எனக்கு கஷ்டமான பரீட்சைக்கு முந்தின நாள் வந்தா என்னவாம்"னு. ஏதோ இந்தியா பாகிஸ்தான் வேர்ல்ட் கப் மாதிரி, "பிட்ச் எல்லாம் நனைஞ்சுடுமே, இந்த வாரமே விளையாட முடியாது. அடுத்த வாரம் ஊருக்கு போறோம். அப்புறம் அக்னி நட்சத்திரம்னு வெளிய போக விட மாட்டாங்க"ன்னு அடுக்கிட்டே போனான்.
கொஞ்ச நேரம் பொறுத்து, எப்படியும் விளையாட முடியாதுன்னு ஆனபிறகு வாசல்ல போய் மழை எப்போ நிக்கும்னு பாக்கறத விட்டுட்டு, ஜன்னல்கிட்ட வந்து உக்கார்ந்தான். மழைக்கு இதமா சாப்பிட சூடா நொறுக்கு தீனி கொண்டு வந்து குடுத்த அம்மா, அவன பார்த்து "நம்ம ஊருக்கு அடுத்த வாரம் போகல, உன் அத்தை மாமா சென்னை வர்றாங்களாம், அப்புறம் நீ ஏதோ கேட்டன்னு உங்கப்பா புது பேட் வாங்கி பரண் மேல போட்டு வெச்சுருக்காரு, பரீட்சை முடியற வரைக்கும் சொல்ல வேண்டாம்னு இருந்தேன்"னு சொல்லி முடிக்கறப்போ பரண் மேல ஏறி இருந்தான்.

No comments:
Post a Comment