Sunday, 29 March 2020

கடமை

வீட்டுக்குள்ள இருந்துக்கலாம்
விளையாடி பழகிக்கலாம்
வேலைக்கு போகணுமா?
வெயில் மழை பாக்கணுமா?

(இந்த) வாய் அடைச்சு போனதில்லை
(நான்) வாய் அடைச்சு போயிருக்கேன்
வரவங்க போறவங்க
வழியனுப்பி நான் வாரேன்

வரும் முன்ன காக்க வேணும்
(வியாதி) வேரோட போக்க வேணும்
கடமை இது கடமை இது
வேற காரணமும் தேவையில்லை

கதவடச்சு காத்திரு நீ
இந்த காவலாளி பெத்த மகளே!

செல்ல மகள்

செஞ்ச தவமெல்லாம் சேர்த்து வெச்ச புண்ணியமா
செல்ல மகள் பொறந்தாச்சு சேதி சொல்லு ஊருக்குள்ள !

வண்ண துணி உடுத்தி வாரி தல நெறய
பூவும் வெச்சு நான் மகிழ
செல்ல மகள் பொறந்தாச்சு சேதி சொல்லு ஊருக்குள்ள !

நாட்டு நடப்பெல்லாம் நம்மளுக்கு புரிய வெக்க
நாலெழுத்து படிச்சு நம்ம நாதியையும் நிலை நிறுத்த
செல்ல மகள் பொறந்தாச்சு சேதி சொல்லு ஊருக்குள்ள !

காதல் கணவனை கல்யாணம் அவ முடிக்க
கண்ணு கலங்குதடி காலம் அது ஓடுதடி
என்றும் அவ தானே என் வீட்டு மகராசி, இன்று மறுவீடு
செல்ல மகள் பொறந்தாச்சு சேதி சொல்லு ஊருக்குள்ள !

வீழாதிரு!

பாரின் பாரம் பலவாய் இருந்தும் பசி பிணி போர் என பல்லுயிர் ஈந்தும் ஓர் பகை உலகிற்குள்ளே உதிக்க ஒரு சேர் மக்கள் உவந்ததை எதிர்க்க ஒன்றானதுவே உன்னை வீழ்த்தும்!