அன்று சீதை! இன்று இவள்! ஆம். இலங்கை மண்ணில் இருந்து இங்கு பிரவேசம். அவள் அவ்விருவரை பெற்றெடுத்து பெற்றோர் ஆக்கிக் கொண்டாள். அவளின் அழுகை அமுதம் போல் ஒலித்ததாம். அவர்களின் "வாழ்வு தொடங்கும் இடம்" அவள் ஆனாள். உண்மையின் ஒன்பதாம் பிறந்த நாள். அமுதாவின் எண்ணமெல்லாம் இடம் பெயர்ந்தன! அம்மாவை தேடி! "அப்பொழுது இந்திரா?? " என்று கேட்டவர்களிடமெல்லாம் "அவங்க என் நெஜ அம்மா இல்ல, என் அம்மா ராமேஸ்வரத்துல இருக்காங்க" என்றாள். அன்று முதல் அம்மா சின்ன கோபம் காட்டினாலும் "அம்மாவுக்கு என்ன பிடிக்கல" என்றபடி அப்பாவிடம் புகார் சொன்னாள். பெண் பிள்ளை! அப்பாவிடம் ஒட்டுதல் அதிகமாய் இருப்பது இயல்பு தானே. அமுதா - ஒவ்வொரு குழந்தையின் பிரதிபலிப்பு. சின்ன கோபத்தின் வெளிப்பாடு. பாசத்தின் உறைவிடம். தேடல் பயணம் தொடங்கியது. பயணத்தின் வழி நெடுக தாயையும் தாய் மண்ணையும் பிரிந்தவர்களின் கண்ணீரும் அழுகையும். இது தான் தன் நாடு என்று ஏற்றுகொள்ள முடியாமல் திணறியது அந்த மனம். பயணத்தின் இலக்கு பக்கம் வந்தது. பூங்காவில் பூவை பெற்றவளை எதிர் நோக்கி இவர்கள் காக்க கண் முன் நிகழ்ந்த பயங்கரம் மூச்சிரைக்க வைத்தது. தன்னுடைய உயிருக்கு உயிர் கொடுத்தவளை தன் உயிரை பணயம் வைத்து பார்க்க துணிந்தாள் இந்திரா. அமுதா கனத்த மனதுடன் "அம்மா அங்க மறுபடியும் போக வேண்டாம் என்றாள்". அப்பாவை அறிமுகம் செய்யும் தாய்மாரிடம் இருந்து வேறு பட்டு, தன் குழந்தைக்கு அம்மாவையே அறிமுகம் செய்தாள் இந்திரா. அந்த நிகழ்வு தாய்மையின் உச்சம். பாச சாரல் படர அமுதா பார்க்க, மனதில் பதற்றத்தோடும் குற்ற உணர்வோடும் அங்கு மோதின இரு பார்வைகள். அமுதா கேட்ட கேள்விகளுக்கு அவளின் அமைதி பதிலாகின. அமுதா "என்ன தூக்கி வெச்சுருகிங்களா" என்ற பொழுது அவளின் பதில், "ஒரே ஒரு முறை ஒரு விரலால் உன்னை தொட்டேன். உடனே தூக்கி கொண்டு போய் விட்டனர்". தன்னை அறியாது கண்களில் அருவி பெருக்கெடுக்க, அழுகை அவள் தொண்டையை அடைத்தது. "அம்மா" என்று அவள் கூப்பிட ஆயிரம் யானைகள் தன்னை கட்டி இழுப்பது போல் உணர்ந்தாள் அந்த தாய். "தருணம் அப்படி. இங்கும் ஒரு நாள் விடியல் பிறக்கும்" என்ற வார்த்தையுடன் பிள்ளையை கட்டி அணைத்து விடை பெற்றாள் அவள். இலக்கை அடைந்த அமுதா வெற்றி களிப்பில், தன் தாயின் "கன்னத்தில் முத்தமிட்டாள்"!!
Friday, 7 December 2012
Wednesday, 31 October 2012
Not a walk, but a week to remember!!!
It all started, the
weekend, or probably should I call it the week start as I learnt in my 1st
standard!! SUNDAY. Yes, just as I stepped into the bus, I got a text that stated a great news, one that many of us were waiting to hear.
Once one of my friends told me,
“I know we all will
achieve, but I don’t know when our journey will start”
Definitely not a sign of arrogance, but of Confidence. To get something that
others feel great has been life for years. But now I understood it is much more.
Success is inevitable once you work as much as to really forget it. Long for
what you like, love, passionate about. Live for it! One day when you feel you
have moved far from getting it, God will shower it upon you! Yes that’s what
has happened. There are many others who are waiting to receive what they deserve.
This is just a beginning. The journey begins!!
And that’s not where the
story ends! A long rainy week. With an assessment and lab semester the next
day, Monday seemed tedious! But by 5.55 am on Tuesday, heard something good –
most pleasing! “TN government announces holiday for all schools and colleges in
Chennai” The only thing I ended up doing is waking up my friends in hostel and
instructed them to sleep more! Cycling in rain, it gives such a great feeling
with all trees falling, finding you the only person in the street. Trees bent
so much that I felt they are trying to whisper some secret into my ears!
Motocross madness in reality! Wow!!! And now the dawn will mark the hat-trick of holidays. And this weather made Chennai more aesthetic as I looked out for some way to thank the
cyclone “Neelam”. BLEED BLUE! Now, waiting for any of its siblings, Pachai, Manjal or Sivappu to visit Chennai, because you know, we are known for hospitality.
"வந்தாரை வாழ வைக்கும் சிங்கார சென்னை"!!!
Wednesday, 17 October 2012
படிப்படியாய் தான் முன்னேற்றம்
வணக்கம்! எனது முதல் பதிவு. தமிழில் இருக்க வேண்டுமென ஒரு ஆசை. இப்பதிவு எதை பற்றியதாக இருக்கும் என்னும் கேள்வி எனக்கும் இத்தனை நாட்களாய் இருந்தது. இருக்கிறது!!! இன்று நடந்த நிகழ்வு! என்னை போன்றவர்களுக்கு தினமும் காலையில் விழிப்பதிலிருந்து கண் உறங்கும் வரை அனைத்து முடிவுகளும் பேருந்தை பிடிப்பதையே சார்ந்திருக்கும். இன்றும் விதிவிலக்கல்ல! 8 மணிக்கு தேவாலயத்தின் மணியோசையுடனே சேர்ந்து கேட்கும் 5E பேருந்தின் வருகை சத்தம். அரசியல் கட்சி கூட்டங்களில் சொல்வது போல் ஆரவாரத்துடன் அலை கடலென மக்களை அழைத்து வரும் தேர் அது! என்னதான் தாமதமாக வருவதால் இப்பேருந்தை மக்கள் குறை சொல்லி சபித்தாலும் உள்ளூர ஒரு பாசம் இருக்க தான் செய்கிறது. தூரத்தில் ஒரு 5E வருவதை பார்த்த உடன் வரும் உற்சாகம், வேகம் - பேருந்தை துரத்தி வீடு வரை ஓட செய்தாலும் வியப்பல்ல! பொறியியல் சீட் கிடைப்பது கூட சுலபம் தான் , பேருந்தில் சீட் தேடுபவர்களுக்கு! வாழ்க்கையில் படிப்படியாய் தான் முன்னேற வேண்டுமென கற்பித்ததே பேருந்து தான்! ஒவ்வொரு படி முன்னேற்றமும் கடும் பொறுமைக்கான பரிசு. முகத்தில் அடி, முதுகில் இடி என வாழ்பவர்கள் நாங்கள்! வாழ்கையின் நிதர்சனத்தை வரும் வழியிலேயே அனுபவிப்பவர்களில் நானும் ஒருவன்! எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை தருணங்கள்! உலகத்தை ஒரு மணி நேரத்தில் உணர நினைப்பவர்களுக்கு என் யோசனை- சென்னையில் பேருந்தில் வேலை நேரங்களில் பயணியுங்கள்! வாழ்கையை வாழ்ந்து பாருங்கள்! உலகம் உங்கள் கால் அடியில்(பேருந்தின் படியில்)!
Subscribe to:
Posts (Atom)