அன்று சீதை! இன்று இவள்! ஆம். இலங்கை மண்ணில் இருந்து இங்கு பிரவேசம். அவள் அவ்விருவரை பெற்றெடுத்து பெற்றோர் ஆக்கிக் கொண்டாள். அவளின் அழுகை அமுதம் போல் ஒலித்ததாம். அவர்களின் "வாழ்வு தொடங்கும் இடம்" அவள் ஆனாள். உண்மையின் ஒன்பதாம் பிறந்த நாள். அமுதாவின் எண்ணமெல்லாம் இடம் பெயர்ந்தன! அம்மாவை தேடி! "அப்பொழுது இந்திரா?? " என்று கேட்டவர்களிடமெல்லாம் "அவங்க என் நெஜ அம்மா இல்ல, என் அம்மா ராமேஸ்வரத்துல இருக்காங்க" என்றாள். அன்று முதல் அம்மா சின்ன கோபம் காட்டினாலும் "அம்மாவுக்கு என்ன பிடிக்கல" என்றபடி அப்பாவிடம் புகார் சொன்னாள். பெண் பிள்ளை! அப்பாவிடம் ஒட்டுதல் அதிகமாய் இருப்பது இயல்பு தானே. அமுதா - ஒவ்வொரு குழந்தையின் பிரதிபலிப்பு. சின்ன கோபத்தின் வெளிப்பாடு. பாசத்தின் உறைவிடம். தேடல் பயணம் தொடங்கியது. பயணத்தின் வழி நெடுக தாயையும் தாய் மண்ணையும் பிரிந்தவர்களின் கண்ணீரும் அழுகையும். இது தான் தன் நாடு என்று ஏற்றுகொள்ள முடியாமல் திணறியது அந்த மனம். பயணத்தின் இலக்கு பக்கம் வந்தது. பூங்காவில் பூவை பெற்றவளை எதிர் நோக்கி இவர்கள் காக்க கண் முன் நிகழ்ந்த பயங்கரம் மூச்சிரைக்க வைத்தது. தன்னுடைய உயிருக்கு உயிர் கொடுத்தவளை தன் உயிரை பணயம் வைத்து பார்க்க துணிந்தாள் இந்திரா. அமுதா கனத்த மனதுடன் "அம்மா அங்க மறுபடியும் போக வேண்டாம் என்றாள்". அப்பாவை அறிமுகம் செய்யும் தாய்மாரிடம் இருந்து வேறு பட்டு, தன் குழந்தைக்கு அம்மாவையே அறிமுகம் செய்தாள் இந்திரா. அந்த நிகழ்வு தாய்மையின் உச்சம். பாச சாரல் படர அமுதா பார்க்க, மனதில் பதற்றத்தோடும் குற்ற உணர்வோடும் அங்கு மோதின இரு பார்வைகள். அமுதா கேட்ட கேள்விகளுக்கு அவளின் அமைதி பதிலாகின. அமுதா "என்ன தூக்கி வெச்சுருகிங்களா" என்ற பொழுது அவளின் பதில், "ஒரே ஒரு முறை ஒரு விரலால் உன்னை தொட்டேன். உடனே தூக்கி கொண்டு போய் விட்டனர்". தன்னை அறியாது கண்களில் அருவி பெருக்கெடுக்க, அழுகை அவள் தொண்டையை அடைத்தது. "அம்மா" என்று அவள் கூப்பிட ஆயிரம் யானைகள் தன்னை கட்டி இழுப்பது போல் உணர்ந்தாள் அந்த தாய். "தருணம் அப்படி. இங்கும் ஒரு நாள் விடியல் பிறக்கும்" என்ற வார்த்தையுடன் பிள்ளையை கட்டி அணைத்து விடை பெற்றாள் அவள். இலக்கை அடைந்த அமுதா வெற்றி களிப்பில், தன் தாயின் "கன்னத்தில் முத்தமிட்டாள்"!!
'கன்னத்தில் முத்தமிட்டால்' - ஒரு பத்தியில்... superb rendering of the entire feel.. go on and on... :)
ReplyDeletesemaa :D
ReplyDeleteSuper da !
ReplyDeletemasssssssss :D :D
ReplyDeletesema :) feel and words .. awesome :)
ReplyDelete